யாரோ தன்னை மலை உச்சியிலிருந்து
உருட்டிவிட, மற்றொரு மலை விளிம்பில்
தொட்டு எழ முயல்கிறான் ஆதவன்
அதற்குள் பெரிய பெட்டியுடன் வந்த
பூச்சாண்டி மாமா கடத்திச் செல்வதற்குமுன்
வீடு சென்றடைய வேண்டுமென்பது உத்தேசம்;
ஆதவனை காப்பாற்றும் முயற்சியில்
வாகனமும் நானும் வேகமெடுக்க,
மலைகளுக்குள் மறைந்திருப்பதாக
ஆதவனிடமிருந்து குறுஞ்செய்தி.
பத்திரப்படுத்திக்கொண்டு நகர்ந்தேன்
இடம்: வாளையார், தமிழ்நாடு-கேரளா எல்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக