எனக்கும்
ஒரு கனவு உண்டு
என்னைப்
போலவே பல
உயிர்களுக்கு
அது இலட்சியம்
தயக்கங்கள்
குடிகொண்ட பொழுது
என்னை
நானே ஏமாற்றுகிறேன்
தாங்கிப்
பிடித்தது ஒரு ஏக்கம்
அச்சம்
குடிகொண்ட பொழுது
எனது
வாய்ப்பை நழுவுகிறேன்
தடுமாற்றம்
தந்தது ஒரு அழுத்தம்
முயற்சி
முயற்சி என்று
பயிற்சி
செய்து நின்றேன்
மூளையின்
ஒரு மூலையில்
மறைந்திருந்தது
ஒரு தைரியம்
முயற்சி
திருவினையாக்கும்
எவ்வளவு
மதிப்பிற்குரிய வார்த்தை
மறைந்திருந்தவன்
வெளிச்சத்திற்கு
தைரியமாக
வந்து நின்றான்
வந்து
நின்றவன்
உலகை
பார்த்தான்
உலகில்
பார்த்து
தவழ
தொடங்கினான்
தடைகள்
வந்து
தாமதம்
தந்தது
மகிழ்ச்சியெல்லாம்
அபகரிப்பு
என்னவென்றால்
நிராகரிப்பு
ஒவ்வொரு
நிராகரிப்பிலும்
பிரிவினைகளின்
முன்னிலை
குலத்தால்
நிறத்தால் பணத்தால்
பாலினத்தால்
அதிகாரத்தால்
தடை
தொடரும்... படிக்கட்டுகளாய்
இரண்டு
உள்ளங்கள் பிரிந்தால்
என்ன
வலியோ? அதுபோலவே
எங்கள்
உணர்வுகளின் வலி
திறமைக்கு
பாராட்டை விட
வாய்ப்பு
தான் முக்கியம்
அவ்வாய்ப்பே
பாராட்டை தரும்
வாய்ப்பு
தந்து பாருங்கள்
அதில்
வாழக் காத்திருக்கிறது
பல
உயிர்களின் இலட்சிய கனவு
வாய்ப்பு
தந்தால்
விழுந்தவன்
எழுவான்
எழுந்தவன்
நடப்பான்
நடந்தவன்
ஓடுவான்
ஓடியவன்
பறப்பான்
பறந்தவன்
சிறப்பான்
சிறந்தவன்
வெல்வான்
வென்றவனும்
நிற்பான்
தோற்றவனும்
கற்பான்
வாழ்க்கையின்
வரலாற்றில்
இரண்டு
பக்கங்களாய்..


