இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஏப்ரல் 15, 2020

நான் பிழைப்பேனோ? இல்லை பிழையானேனோ?

என்ன தவம் செய்தேனோ?
மானிடனாய் பிறந்திடவே...

என்ன பாவம் செய்தேனோ?
தெரியாமல் மடிந்திடவே....

கொத்து கொத்தாய்
உயிர்கள் எல்லாம்
கொட்டிக் கிடக்கும்
கோரம் என்ன...?

எட்டி நின்று
பார்க்கும் கண்கள்
கொட்டித் தீர்க்கும்
ஈரம் என்ன...?

இதுதான் விதியோ...? இல்லை
மானுடப் போட்டியின் சதியோ?

அம்மா நல்லா இருக்கீங்களா?
அப்பா எல்லாரையும் பாத்துக்கோங்க!

தங்கச்சிக்கு பிரசவ காலம்!
அண்ணனுக்கு கல்யாணம்!

அக்கா பசங்களுக்கு காதுகுத்து!
தம்பிக்கு தேர்வு நேரம்!

தாத்தாக்கு தைரியம் சொல்லுங்க!
பாட்டிக்கு மருந்து இருக்கா?

மச்சான் பாத்து இருடா?
எல்லாரும் வீட்லயே பத்திரமா இருங்க...!

ஒன்றல்ல...இரண்டல்ல...
என்னவென்று சொல்ல?

தேங்கி நிற்கும் கண்கள்
மடைதிறந்து செல்ல;

அடங்கா மனக் குமுறல்!
அழுத்துதே மெல்ல...

உயிர் காக்க
மருத்துவத்தின் போராட்டம்!
உயிர் சேமிக்க
காவலின் போராட்டம்!

தொற்றை உடைத்திட
தூய்மையின் போராட்டம்!
தொய்வின்றி செயல்பட
தகவல்தொடர்பின் போராட்டம்!

அன்றாட பிழைப்புக்கு
வங்கியின் போராட்டம்!
நாட்டைக் காத்திட
உள்ளிருப்பு போராட்டம்!

மக்கள் நலனில்
அரசின் போராட்டம்!
அடுத்த வேளைக்கு
அரிசியின் போராட்டம்...

மாசடைந்த காற்றிலே
மடிந்து போகும் மானிடமே!

பார்த்து தெளிந்திடு
இது இயற்கையின் பாடமே...

இயற்கை தந்த பாடமொன்று,
நொடியெங்கும் நெஞ்சில் நின்று!
கற் றளந்தது கல்வியென்று...

வதை செய்த கைகள்
பாவம் கழுவும் வேளை;

இயற்கையும் தந்தது
இந்தவொரு நாளை...!

மருந்தாக இருப்பது
வீட்டிலிருக்கும் வேளை...

வீணலைச்சலில் விலகியிரு...
இல்லத்திலேயெ உணர்ந்திரு...
இனியேனும் விழித்திரு...


அக்கறையுடனும் கண்ணீருடனும்
உங்கள் குடும்பத்தில் ஒருவன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக