இந்த வலைப்பதிவில் தேடு

சனி, பிப்ரவரி 17, 2024

போத்துண்டி அணைக்கட்டு மற்றும் பூங்கா








கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள இவ்வணைக்கட்டு ஒரு முக்கியமான சுற்றுலாத்தளம் ஆகும். அணைக்கட்டிலிருந்து நீர்மட்டத்தையும் எதிரே அமைந்துள்ள மலைப்பகுதியையும் சலசலக்கும் காற்றுடன் நன்றாக இரசித்து காணலாம். குறிப்பாக இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா, மிக சுத்தமாகவும், காண்பதற்கு அழகிய மலர்களுடன் அழகாக காட்சி தருகின்றது. குப்பைகளை சேகரிப்பதற்கு ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக நான்கைந்து முறை வந்துள்ளேன். கவனித்தது முதல் இன்றுவரை நிர்வாகத்தினர் நன்றாகவே பராமரித்து வருகின்றனர். குடும்பத்துடன் கண்டுகளிக்க நல்லதொரு பொழுதுபோக்கு ஸ்தலம். இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு கருவிகள் நிறையவே உள்ளன. நடைபயிற்சி மேற்கொள்ளவும் தாராளமான இடமுள்ளது. பூங்காவின் நுழைவு வாயிலிலேயே இருபாலருக்குமான கழிப்பிட வசதி உள்ளது. வெளியே பார்க்கிங் வசதி உள்ளது. பூங்காவின் உள்ளே கம்பிகளில் சைக்கிள் ஓட்டும் திரில் விளையாட்டும் உள்ளது. நிச்சயமாக நல்லதொரு அனுபவமாக இருக்கும். சிற்றுண்டிக்காக உள்ளே ஒரு கடையும் அமைக்கப்பட்டுள்ளது. வார இறுதிநாட்களில் விளையாடி மகிழ சிறந்த ஸ்தலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக