இந்த வலைப்பதிவில் தேடு

புதன், பிப்ரவரி 14, 2024

டவுசர் பசங்க


(மூன்றாம் வகுப்பு படிக்கும் மூன்று நண்பர்களின் கதை)


மாலைவேளையில் பள்ளி முடிந்தவுடன் பொன்னுச்சாமி அழுதுகொண்டிருக்க.....

சின்ஸ்: டேய்! என்னடா அழுதுட்டு இருக்க?

பொன்ஸ்: இல்லடா, எங்க அம்மா வாங்கிக்குடுத்த டவுசர் கிளிஞ்சிடுச்சு இங்க பாரு!

முன்ஸ்: டேய் பொன்ஸ்! உங்க அம்மா போன வாரம் தானடா டவுசர் வாங்கி குடுத்தாங்க.

பொன்ஸ்: ஆமாடா முன்ஸ்...

சின்ஸ்: சரிடா அழாத! இந்தா பின்னூசி, இத குத்தி கிழிஞ்சத சரி பண்ணிக்கோ!

முன்ஸ்: அதெல்லாம் வேணாம்டா, எங்க வீட்டுக்கு வா! எங்க அப்பாகிட்ட சொல்லி ஒட்டு போட்டு தரேன்;

சின்ஸ்: ஆமாடா பொன்ஸ், அவங்க அப்பா டெயிலர் தான்! நாம அவர்கிட்டயே போய் தெச்சுக்கலாம்.

சரிடா என கண்ணை கசக்கிக் கொண்டிருந்த பொன்னுச்சாமி அழுகையை நிறுத்திவிட்டு, சின்னச்சாமி மற்றும் முனுசாமியுடன் சென்றான்.

முனுசாமி இல்லத்தில்,

முன்ஸ் அப்பா: வாங்கடா, டவுசர் பசங்களா! என்ன விசேஷம்? மூனு பெரிய மனுசங்களும் ஒன்னுகூடி வந்திருக்கீங்க.

முன்ஸ்: அப்பா இவனோட டவுசர் கிழிஞ்சிடுச்சு, கொஞ்சம் தெச்சி கொடுங்க!

மு.அப்பா: சரி, அவன கழட்டி குடுக்க சொல்லு!

பொன்ஸ்: சரி, நான் அங்கபோயி கழட்டி தரேன்!

சின்ஸ்: அப்பா! அப்டியே எனக்கும் தச்சு குடுங்கப்பா?
(என தலையை சொறிந்துகொண்டே நின்றான் சின்னச்சாமி)

மு.அப்பா: அடேய் அருவமான டிக்கி பயலே! ரெண்டு நாளைக்கு முன்னாடி தானடா தெச்சு குடுத்தேன்! இப்ப மறுபடியுமா?

சின்ஸ்: அப்பா! அது வேற டவுசர் பா!

மு.அப்பா: சரி கழட்டி குடு, மூணு பேரும் அந்த ரூம்ல இருங்க! நான் தெச்சிட்டு கொண்டு வரேன்.

(மூவரும் அறையில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.)

மு.அப்பா: இந்தாங்க டா, தெச்சாச்சு போட்டுக்கோங்க!

மூவரும் ஒன்றாக: ரொம்ப நன்றிப்பா!

சின்ஸும் பொன்ஸும் டவுசரை மாட்டிக்கொண்டார்கள்.

முன்ஸ்: டேய் பொன்ஸ், அழாம வீட்டுக்கு போ! அம்மா அடிக்கமாட்டாங்க!

பொன்ஸ்: சரிடா, இருந்தாலும் திட்டு வாங்கனும்.

சின்ஸ்: டேய் வீட்டுக்கு போயி, ஒன்னும் தெரியாத மாதிரி நில்லு! மன்னிச்சு விட்டுருவாங்க நான்லாம் எங்க வீட்ல அப்படித்தான் பண்ணுவேன்.

பொன்ஸ்: சரிடா! எங்க அம்மா மட்டும் எதுவும் சொல்லலைன்னா! உங்க ரெண்டு பேருக்கும் சேமியா ஐஸ் வாங்கி தர்றேன் டா.

(இருவரின் கண்களும் பெரிதாகி உதட்டில் சிரிப்(பூ) மலர்ந்தது.)

பொன்னுச்சாமி வீட்டிற்கு சென்றான். அங்கே அம்மாவிடம் சென்று, ஒன்றும் தெரியாதவன் போல் நின்றான்.

அம்மா: என்னடா! ஸ்கூலு விட்டு வர இவ்ளோ நேரமா? 

பொன்ஸ்: அது வந்தும்மா! டவுசரு.............என இழுத்தான்.

அம்மா: என்னடா, டவுசரு?

பொன்ஸ்: டவுசரு கிழிஞ்சிருச்சும்மா!  அத சின்னச்சாமி வீட்டுக்கு போயி தெச்சுட்டு வந்தேன்.

அம்மா: என்னது, புது டவுசர கிழிச்சிட்டியா? உன்ன.................

பொன்ஸ்: ஐயோ, அம்மா என்ன அடிக்காதீங்க! என சத்தமாக கத்தினான்.

(தூரத்திலிருந்து ஒரு கரும்பலகை அழிப்பான் பொன்னுச்சாமியின் முகத்தை வெள்ளை அடித்தது)

டீச்சர்: என்னடா பொன்னுச்சாமி, பகல் கனவா?

பொன்ஸ்: சாரி மிஸ், டவுசர் கிழிஞ்சதுனால எங்க அம்மா கிட்ட அடிவாங்க பாத்தேன்! அதான் கத்திட்டேன்.

டீச்சர்: முன்னாடி வா, இந்த சின்னச்சாமி பையன் கூட சேர்ந்து முட்டி போடு!

(பொன்னுச்சாமி முன்னே வந்து சின்னச்சாமியுடன் சேர்ந்து முட்டியிட்டான்.)

சின்ஸ்: பொன்ஸு, வா! வா! முட்டி போட வெக்கப்படாத, இந்தா பொறி உருண்ட சாப்டு! மிஸ் அந்த பக்கம் திரும்புனா மட்டும் தெரியாம சாப்டு, சரியா!

பொன்ஸ்: சரிடா, அருவமான டிக்கி.

( பொன்ஸ் மனக்குரல்:
பொறி உருண்டை சாப்டு சாப்டு தான் இவன் உருண்டையா இருக்கானா? அதனாலதான் டவுசர் கிழியுதோ?
சரி, நாம பொறி உருண்டைய சாப்டுவோம். என் டவுசர் மட்டும் கிழிஞ்சிடகூடாது பிள்ளையாரப்பா!....)


                                                                                                                        முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக