இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஜூன் 26, 2024

மாலை நேரத்து மயக்கம்


காற்றிலாடிக்கொண்டிருந்த உடைகள்

முத்தமிட்ட மழைத்துளிகளைக்

காண்பிக்க

வெள்ளை பெட்டிக்குள்

தொப்பென்று விழுந்தன கிளிப்புகள்


தங்கள் ஆட்டங்களை 

மின்னி மின்னி 

கவர்ந்திழுக்கின்றன

மின்விளக்குகள்

அவசர ஓட்டத்தில்

ஓரேயொருமுறை மட்டும்

அதனைப் பார்த்து நகர்கிறாள்

ஏஞ்சலின்


நெடுஞ்சாலை போக்குவரத்தின்

மாலைவேளை குளிருக்கு

மத்தியில், 

ஆவி பறக்க

சுண்டியிழுக்கிறது

பிரியாணிக் கடை

தேநீருக்கு இன்று ஓய்வு


வேலைமுடிந்ததும் 

உணவுப்பையை தூக்கிக் 

கிளம்பும் ஆல்வினுக்கு இன்று 

தொண்ணூற்று நான்காவது 

வேலைநாள்


அவ்வப்பொழுது நேரவிருக்கும்

நிகழ்வுகளை முன்பே

அட்டவணைப்படுத்திக்

காத்துக்கொண்டிருந்தது

ஒரு மாலை நேரம்.

- ஆ.கிருஷ்ணதாஸ்.


(ஆனந்த விகடன் வார இதழில்  சொல்வனம் பகுதியில் 26-06-2024 அன்று இப்படைப்பு வெளிவந்துள்ளது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக