முடிச்சு இடப்பட்டிருந்த
முனையில்
ஓர் ஆட்காட்டி விரலையும்
எதிர் முனையில்
மற்றொரு
ஆட்காட்டி விரலையும்
மடக்கிப் பிடித்து
சுழற்ற
நடுவில் நின்ற
இனிப்புச் சக்கரம்
குதித்து ஓடியது
சுற்றலை நிறுத்தி
நூலின் இறுக்கத்தை
விட்டு விட்டு இழுத்ததும்
ரொங்..ரொங்..கென்றது
நெடுநாட்களுக்கு பிறகு
அச் சப்தத்தை
காதருகில் வைத்து
மகிழ்ந்தது
என்னுள் இருக்கும்
அக் குழந்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக